சுதந்திர இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவரான ஆ.ப.ஜெ.அப்துல்கலாமின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில், நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பேய்க்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் மாவட்டத் தலைவர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் மண்டம் ஒன்றிய செயலாளர் ஏ.சி.ஜீவானந்தம் மற்றும் உள்ளூர் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.