விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை ஆதரித்தார் எடப்பாடி பழனிசாமி என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட நிலையில், நான் ஏன் ஆதரித்தேன் தெரியுமா என்று பதில் அறிகை வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நான் ஏன் ஆதரித்தேன் தெரியுமா? கேளுங்கள் ஸ்டாலின்,
🔸 மூன்று விவசாயச் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதால்தான் அவற்றை எதிர்க்கவேயில்லை
🔸 விவசாயிகள் விளை பொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகச் சட்டத்தைப் பொறுத்தவரை, வேளாண் விலை பொருட்களை trade area என அறிவிக்கை செய்யப்பட்ட எந்த இடத்திலும் விற்பனை செய்ய அனுமதிப்பதால், விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைக்கிறது.
🔸 தமிழ்நாட்டில் வேளாண் விற்பனை வளாகத்தில் பொருட்களை விற்பனை செய்யும்போது வர்த்தகர்களிடமிருந்து ஒரு சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நெல், கோதுமைக்கு சந்தைக் கட்டணமாக மூன்று சதவீதமும் உள்ளாட்சி மேம்பாட்டு சிறப்பு வரியாக மூன்று சதவீதமும் வசூலிக்கப்படுகிறது.
🔸 இடைத் தரகர்களுக்கு 2.5 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய சட்டப்படி, வேளாண் விற்பனைக் கூடங்கள் தவிர்த்த பிற இடங்களில் கட்டணம் வசூலிக்க முடியாது என்பதால் மாநில அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்பதால் அங்கு எதிர்ப்பு நிலவுவதாகவும் ஆனால், இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் பொருட்களை விற்பனை செய்யலாம் என்பதால் கூடுதல் விலை கிடைக்கும்
🔸 இந்தச் சட்டத்தின் மூலம் விளை பொருட்களுக்கு தேவையில்லாத இருப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லையெனவும் இதனால், வியாபாரிகள், வர்த்தகர்கள், விவசாயிகள் ஆகிய மூன்று தரப்புக்குமே பலன் கிடைக்ககும்
விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும், இந்த மசோதாவின் முழு சாராம்சத்தையும் தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு அதன்பிறகு விமர்சனம் வையுங்கள்.