2021 வரை பள்ளிகள் திறப்பு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிகள்
Share

தேர்வுகள், வகுப்புகள் என எல்லாம் தொடங்கியாயிற்று. ஆனால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதுதான் இப்போதைக்கு பிரதானமான கேள்வி. இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

கேரளாவில் பள்ளிகள் திறப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில் ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்தற்கான பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆசிரியர்கள் தினமான இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.

அப்போது கேரளாவில் பள்ளிகள் ஜனவரி மாதம் திறக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, “கேரளாவில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் திறக்கப்படாது. இங்கு பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.

இப்போதைக்கு இந்த முடிவுதான் சிறந்த முடிவு. குழந்தைகளின் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் விளையாடக்கூடாது என்பதில் அரசு இதே உறுதியோடு இருக்க வேண்டும் என்பதே பென்பாய்ண்ட்டின் வேண்டுகோளும். எதிர்பார்ப்பும்.

இதற்கிடையில், மருந்து அல்லது நோய்தீர்ப்பதற்கான நிரூபணமான முறை கிடைத்துவிட்டால் அதைப் பொறுத்து முடிவுகளை மாற்றலாம். ஆனால், இதே நிலை நீடித்துக்கொண்டே இருக்கும் சூழலில் பள்ளிகள் திறக்கப்படக் கூடாது.


Share

Related posts

காங்கிரஸுக்கு இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக வேண்டும்: பிரியங்கா காந்தி

gowsalya mathiyazhagn

டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து

web desk

சுதந்திர தினம்… தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு?

web desk

Leave a Comment