தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக, இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுடைய கல்வித் திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.
அரசு பள்ளியை பொறுத்தவரையில் ஏற்கனவே கல்வித் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கு இதன் பலன் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழகத்தின் 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக வகுப்புகள் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சிக்கும் ஒவ்வொரு வகுப்புகள் மற்றும் காலநேரம் ஒதுக்கப்பட்டு, அட்டவணை செயல்படுத்தப்பட்டுள்ளது.