விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி?:மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் மதுரை ஐகோர்ட்

Share

தமிழக அரசு கடந்த 13-ந்தேதி வெளியிட்ட அரசாணையில், விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டாடக்கூடாது என்று தடை விதித்து இருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் உரிய வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதி தருமாறு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில்,

தமிழகத்தில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும்நிலையில். விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும்.கொரோனா தாக்கம் இல்லை என்றால் விநாயகர் சதுர்த்தி நடத்துவதில் நீதிமன்றம் ஏன் தலையிடப் போகிறது? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், மனுதாரர் மனுவை திரும்ப பெறாவிட்டால் அதிக அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.


Share

Related posts

குறைகிறதா கொரோனா பாதிப்பு:சென்னையில்

Admin

இயற்கை வளத்தை அழிக்க கூடாது! – நடிகர் கார்த்தி அறிக்கை

Admin

கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தல்: கடையடைப்பு நடத்த உள்ளதாக வணிகர்கள் சங்க பேரமைப்பு தகவல்

Admin

Leave a Comment