கல்வெட்டு ஆய்வாளர் து.சுந்தரம் மறைவு

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம்
Share

தொல்லியல் துறை ஆர்வமுள்ள பலருக்கு ஆன்லைன் வழியாகவும் நேரடியாகவும் ஆசானாக விளங்கிய கல்வெட்டு ஆய்வாளர் து.சுந்தரம் இன்று காலமானார்.

கோவையைச் சேர்ந்த து.சுந்தரம் பிராமி எழுத்துகள் மற்றும் முற்காலக் கல்வெட்டு எழுத்தியல் துறையில் வல்லமை மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. து. சுந்தரம் அவர்கள் அவினாசி பள்ளியிலும், கோவை அரசு கலைக்கல்லூரியிலும் படித்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றியவர். தொல்லியல் ஆர்வமும் கல்வெட்டறிவும் அமையப்பெற்றதால், நடுவணரசுப் பணிநிறைவுக்குப் பின்னர், கல்வெட்டுகளைத் தேடிச் சென்று, அவற்றை ஆராய்ந்து, தகவலைப் படித்து, கல்வெட்டுகளைப் படமெடுத்து, அவற்றைப் பற்றி தானறிந்த விவரங்களை “கொங்கு கல்வெட்டு ஆய்வு” என்ற தனது வலைத்தளத்தில் தொகுத்து பதிவு செய்து வருகிறார். 

ஆர்வத்துடன் தான் திரட்டும் தொல்லியல் செய்திகளை அனைவருக்கும் உதவும் வகையில் பதிவு செய்து, கல்வெட்டுகளைப் படிக்க பயிற்சியும் அளித்துவரும் திரு. சுந்தரம் அவர்களின் தன்னார்வப் பணி தமிழக வரலாற்றைப் பற்றிய விரிவான பார்வையை பலரும் பெற உதவும் என்றால் அது மிகையன்று. 


Share

Related posts

Online Degree: பி.எஸ்.சி. செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐ.ஐ.டி.

Admin

மாணவர் நலனா? தேர்தல் பலனா? அரியர் மாணவர்களும், அதிமுக வியூகமும்…

Admin

நடிகர் ஷியாம் கைது: பின்னணி என்ன

Admin

Leave a Comment