தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்: முதல்வர் பழனிச்சாமி சுதந்திர தின உரை..

Share

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, கோட்டை கொத்தளத்தில் 4-வது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

*மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன்.

*அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்

*மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.

*சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.16,000- லிருந்து ரூ.17,000-ஆக உயர்த்தப்படுகிறது.

.*கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழக அரசு, பொதுமக்களின் ஒத்துழைப்புடன்போராடி வெல்லும்

*குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க ரூ 7,500 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

*கொரோனா காலத்திலும் பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வல்லுனர் குழு அமைப்படும்.

*பொருளாதாரத்தில் தமிழகம் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்

*மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் விரைவில் திறக்கப்படும்.

*அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

*ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ 300 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

*பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்த மகளிர் குழுவிற்கு சுழல்நிதி மற்றும் கடன் வழங்கப்படும்.

*உடுமலைபேட்டையில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்

.*கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,433 கோடி மதிப்பில் 6,278 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

*காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது

*கடந்த 8 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியில் 6 முறை 100 லட்சம் மெட்ரிக் டன் தாண்டி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.


Share

Related posts

இந்து மதத்தை விமர்சிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – நடிகர் சரத்குமார் கருத்து

Admin

கோயம்பேடு சந்தைக்கு போக ரெடி ஆகுங்க…

Admin

இதுக்குத்தா தேர்வுக்கட்டணமா?????

Admin

Leave a Comment