மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதல் அமைச்சர் பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
*கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
*அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.
*முடக்கம் அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*நியாய விலைக்கடை மூலம் முகக்கவசம் இலவசமாக வழங்கப்படும்.
*சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையினால் சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
*இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்படுகிறது.
*மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும்.