கொரோனாவால் ஊரடங்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான வணிகத்திற்கு அரசு தளர்வுகள் அளித்துள்ளது.
ஆனால் சென்னையில உள்ள கோயம்பேடு மார்க்கெட் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை.
கோயம்பேடு மார்க்கெட்டையும் பிற மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட்டுகளையும் திறக்க கோரி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூட வியாபாரிகள் முடிவெடுத்துள்ளதாக வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.