மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் உள்ள பொருட்கள்

Share

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, போயஸ் கார்டனில் உள்ள, வேதா நிலையத்தில் வசித்து வந்தார். அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜெயலலிதா வசித்த வீடு, அரசுக்கு சொந்தமாக்கப்பட்டு உள்ளது.வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விபரம், தற்போது வெளியாகி உள்ளது.

வீடு, தரைதளம் மற்றும் இரண்டு மாடிகளை கொண்டது. வீட்டில், இரண்டு மாமரம், ஒரு பலா மரம், ஐந்து தென்னை மரங்கள், ஐந்து வாழை மரங்கள் உள்ளன.

வீட்டில், 4 கிலோ, 372 கிராம் எடையுள்ள, 14 வகையான தங்க ஆபரணங்கள்; 601 கிலோ, 424 கிராம் எடையுள்ள, 867 வெள்ளி பொருட்கள்; 162 வகையான சிறிய வெள்ளி பாத்திரங்கள் உள்ளன.

11 ‘டிவி’க்கள்; 10 ரெப்ரிஜிரேட்டர்; 38 ‘ஏசி’க்கள்; சமையல் அறை தவிர்த்து, பிற அறைகளில், 556 மரப் பொருட்கள்; 6,514 சமையல் பாத்திரங்கள்; 12 சமையல் அலமாரிகள்; 1,055 அலங்காரப் பொருட்கள்; 15 பூஜை பாத்திரங்கள்; 10 ஆயிரத்து, 438 துணி வகைகள்; 29 டெலிபோன் மற்றும் மொபைல் போன்கள்; சமையல் அறையில், 221 எலக்ட்ரிக் சாதனங்கள் உள்ளன.இதுதவிர, 8,376 புத்தகங்கள்; 394 நினைவுப் பரிசுகள்; 653 ஆவணங்கள்; 253 எழுது பொருட்கள்; 65 சூட்கேஸ்கள்; 108 அழகு சாதனப் பொருட்கள்; ஆறு கடிகாரங்கள்; ஒரு நகலெடுப்பு இயந்திரம்; ஒரு லேசர் பிரின்டர்; 959 இதர பொருட்கள் என, மொத்தம், 32 ஆயிரத்து, 721 பொருட்கள் உள்ளன. இவற்றை, தமிழ்நாடு அரசு இதழ் வெளியிட்டுள்ளது.


Share

Related posts

கந்த சஷ்டிக்கு அகைன்ஸ்ட்: போலீஸ் அரஸ்ட்

Admin

தலயோட வழியை பின்பற்றிய சின்ன தல..

Admin

தமிழகத்தில் மேலும் 6988 பேருக்கு கொரோனா

Admin

Leave a Comment