பாதுகாப்பா டாஸ்மாக் நடத்த தெரியுற அரசாங்கத்துக்கு, விநாயகர் சதுர்த்தி நடத்தினால் கொரோனா பரவுதாம் என்று சில நாட்களுக்கு முன்பு தமிழகம முழுக்க பரவலாக பேசப்பட்டது. தற்போத் இந்தக் குரல் கோயம்பேட்டின் பக்கம் திரும்பியுள்ளது.
அடித்தட்டு மக்களும் அன்றாடங் காய்ச்சிகளும் அடியோடு வாழ்விழந்து நிற்கும் நிலை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் திறக்கப்பட உள்ளது கோயம்பேடு மார்க்கெட்.
கோயம்பேடு காய்கறி சந்தையில் சி.எம்.டி.ஏ. செயலர் கார்த்திகேயன் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், கோயம்பேடு அங்காடி குழு முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜு உள்ளிட்ட அதிகாரிகளும் இங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் விரைவில் கோயம்பேடு காய்கறி சந்தை திறப்பு குறித்து அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றாலும், இந்த நடவடிக்கை கொஞ்சம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.