சென்னை இன்று தனது 381அவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்நிலையில், நாம் ஒன்றில் தெளிவு பெற வேண்டும். மதராசப் பட்டினம் என்பது வேறு. மதராஸ் மாகாணம் என்பது வேறு.
அதாவது ஆந்திரா, கேரளா, தமிழகம் ஒன்றாக இருந்த பகுதிதான் மதாராஸ் மாகாணம். இந்த பெரு மாகாணத்தின் தலைநகராக இருந்த பகுதிதான் மதராஸ் பட்டினம். ஆரம்ப காலத்தில் இதுதான் சென்னைப் பட்டினம் என்றும் மதராசப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.
ஆந்திரா, கேரளா, தமிழகம் ஒன்றாக இருந்த போது தமிழகம் மெட்ராஸ் மாகாணம் என்றே அழைக்கப்பட்டது. அதன் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, ஆந்திரா, கேரளா தனி மாநிலங்களான பிறகும், தமிழகத்தின் தலைநகர் மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அப்போதும் தலைநகரின் பெயர் மெட்ராஸ்/மதராஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. பின் கலைஞர் ஆட்சியில் 1996ஆம் ஆண்டு சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.