அவுட்டுக்காய் வெடித்து கடந்த இரு மாதங்களாக வாயில் காயத்துடன் தமிழக- கேரள வன எல்லையில் சுற்றி வந்த மக்னா யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை மாவட்டத்தில் வாயில் காயம்பட்ட நிலையில் உணவு உட்கொள்ள முடியாமல் சுற்றித்திரிந்த 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை, கேரள வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து மன்னர்காடு மாவட்ட வன அலுவலருக்கு கோவை மாவட்ட வன அலுவலர் தகவல் தெரிவித்ததையடுத்து, கேரள வனத்துறையினர், காயம்பட்ட யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, வாயில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளித்தனர்.
அப்போது யானையின் நாக்கு பகுதி சிதறி இருந்ததும், அதன் மேல் தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதும், எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ள முடியாது என்ற முடிவில் 48 மணி நேர கண்காணிப்பிற்கு அடர்ந்த வனப்பகுதியில் யானையை கேரள வனத்துறையினர் விட்டனர்.
நூலகங்களுக்குப் போகும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
தொடர்ந்து, கடந்த மாதம் 27ஆம் தேதி மீண்டும் கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட போளுவாம்பட்டி வனசரகத்திற்குட்பட்ட நரசிபுரம் பகுதியில் தென்பட்டதை மக்னா யானை கோவை வனத்துறையினரின் கண்காணிப்புக்குள் வந்தது. மருந்துகள் கலந்த உணவு, பழங்கள் என யானைக்கு உணவு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவையில் சுற்றிவந்த மக்னா யானை, கடந்த 7ஆம் தேதி மீண்டும் கேரளா சென்றது.
இந்நிலையில், சோலையூர் அருகே மரப்பாலம் பகுதியில் சாலையில் படுத்திருந்த மக்னா யானை உயிரிழந்தது.
சாலையில் உயிருடன் படுத்திருந்த நிலையில் யானை 10நிமிடங்களில் உயிரிழந்துள்ளது.
தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா?
அவுட்டுக்காயால் வாய் முழுமையாக அறுபட்டு பாதிக்கப்பட்ட யானை, தண்ணீர் மற்றும் கோவை வனத்துறையினர் வைத்த மருந்துகள் கலந்த உணவை கொஞ்சம் உட்கொண்டு நம்பிக்கையுடன் நடமாடியது.
கேரளவில்
உயிரிழந்தபோதும், யானை பாதிக்கப்பட்டது கோவை வனசரகம் என்பதால், கோவை வனத்துறையினர் யானை மரணம் தொடர்பாக விசாரித்து தகவல் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.