புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். புதுச்சேரியில்எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும். என்றும் யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.