தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி இன்று டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தும் வகையில் அமைச்சர்கள் இருவரும் டெல்லி செல்வதாகக் கூறப்படுகிறது
கொரோனா தடுப்பு 9 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி, மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ஆயிரம் கோடி வழங்க வேண்டும்,என தமிழக அரசு ஏற்கெனவே கோரிக்கைகளை வைத்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி டெல்லி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன