திருவாடானை ஸ்டேட் பாங்கில் நேற்று ஏராளமான வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க குவிந்தனர்.ஆனால் வங்கியில் பணம் எடுக்கும் முன்பு கை கழுவும் வகையில் சோப்பு, தண்ணீர் இல்லை. கொரோனா தொற்று பரவும்என தெரிந்தும் சிலர் முகக்கவசம் அணியாமலும், சமூகஇடைவெளி இல்லாமல் கூடினர்.
பணம் எடுக்கும் போதும், செலுத்தும்போதும் முண்டியடித்து சென்றனர்.ஏற்கனவே இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்கள் கூட்டமாக கூடி நிற்பதை வங்கி அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது. அப்பகுதியில்குடியிருப்போர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது