நாளை தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு

Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 7-வது கட்டமாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆகஸ்ட் மாதம் வரும் 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு தினமான நாளை, ,மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மட்டுமே செயல்படும். காய்கறி கடை, மளிகை கடை உட்பட, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும்; வாகனங்கள் எதுவும் இயங்காது.மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வராமல், முழு ஊரடங்கிற்கு, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


Share

Related posts

மாணவர் நலனா? தேர்தல் பலனா? அரியர் மாணவர்களும், அதிமுக வியூகமும்…

Admin

ஆகஸ்ட் 24 முதல் மீண்டும் முதுகலை மருத்துவ தேர்வுகள் தொடங்கும் : தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம்.

Admin

நூலகங்களுக்குப் போகும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Admin

Leave a Comment