ஆன்லைன் சூதாட்டம் விளையாட தடை: நீதிமன்றம் அறிவுறுத்தல்

Share

வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் சூதாட்டம் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களை தூண்டுகிறது.

இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

தமிழத்தில் சூதாட்டம் குற்றச்செயலாக உள்ளது. இதன் படி சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது, வழக்குகள் பதியப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் ஆன்லைன் மூலம் வெளிப்படையாகவே ஆன்லைன் சூதாட்டம் நடைபெறுகிறது. இதற்கு எதிராக எந்த நடவாடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை.

இது குறித்து கேள் எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழக அரசுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.

ஒருசிலர் சில அட்டைகளை வைத்து விளையாடுவதற்கு தமிழ்நாடு விளையாட்டுச் சட்டத்தின்கீழ் சூதாட்டம் என வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

ஆனால் இதே தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் ரம்மி என்ற சூதாட்ட விளையாட்டை விளையாடுவதற்கு மட்டும் எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன்போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் முளைத்துக்கொண்டு இருக்கின்றன.

இதுபோன்ற ஏராளமான விளையாட்டு விளம்பரங்கள் அனைத்து சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் வருகின்றன.

எம்.ஜி.ஆர். சிலையினை அவமதித்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை:முதலமைச்சர் நாராயணசாமி

இவை அனைத்தும் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞர்களை தூண்டும் வகையில் செயல்படுகின்றன. அதாவது வீட்டில் இருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களை திசை மாற்றுகிறது.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களால் அவர்களின் குடும்பம் பாதிப்புக்குள்ளாகிறது.

இந்திய தொழில்நுட்ப சட்டங்களுக்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இணங்குவதில்லை என்று தமிழக சட்டம்-ஒழுங்கு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே ஆன்லைன் ரம்மியை திறந்தவெளி விளையாட்டாக கருத முடியாது. இதில் சூதாட்டம் நடக்கிறது என்பதையும்,

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கென எந்த விதியும் இயற்றப்படவில்லை என்பதையும் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒப்புக்கொண்டு உள்ளார்.

எனினும், பணம் செலுத்தி ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடுவதற்கு இடம் அளிக்காத வகையில் , தெலுங்கானா மாநில அரசு, தெலுங்கானா விளையாட்டுச் சட்டத்தை 2017-ம் ஆண்டு திருத்தம் செய்து உள்ளது. இந்தியா பலதரப்பட்ட வளமான பாரம்பரியத்தை கொண்டு உள்ளது.

இங்கு விளையாட்டு என்பது முக்கியமான பொழுதுபோக்கு வளம் மட்டுமல்ல; கடின உழைப்பிற்கான மதிப்பையும் அளிக்கிறது.

ஒழுக்கத்துக்காகவும், உடலை சீராக வைக்கவும் விளையாட்டுக்களை வகைப்படுத்தி வைத்து உள்ளோம். ஆனால் தற்போது வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுகளை சமாளிக்க ஒழுங்குமுறை அமைப்பை கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்.

எனவே இந்த விளையாட்டுகளை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் நாகலாந்து, சிக்கிம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் தங்களின் விளையாட்டு சட்டங்களை திருத்தி உள்ளன.

பல குடும்பத்தினரின் ரத்தத்தை லாட்டரிச்சீட்டு உறிஞ்சியபோது, 2003-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, லாட்டரி விற்பனையை தடைசெய்தது.

இதனால் ஏராளமான தற்கொலைகளை அரசாங்கம் தடுத்தது. அதன்மூலம், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும், குடும்பத்தினரின் அமைதியையும் காப்பாற்றி நற்பெயரை சம்பாதித்தது.

அதே ஆண்டில் அதிக வட்டி வசூலை குறிக்கும் தினசரி வட்டி, மணி நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி போன்றவற்றையும் தடை செய்து பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை தமிழக அரசு துடைத்தது.

அந்த வகையில் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் தீங்குகளை கவனத்தில் கொண்டு, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் தடை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற இந்த கோர்ட்டு அறிவுறுத்துகிறது.


Share

Related posts

கட்டுபாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்- கர்நாடக முதல்வர் அறிவிப்பு…

Admin

கூட்டுறவுத்துறைக்கு சுற்றறிக்கை : நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

Admin

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

Admin

Leave a Comment