புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து,சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு திறந்தவெளியில் சட்டசபை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.வுக்கு தொற்று உறுதியானதையடுத்து அனைத்து எம்.எல்.ஏ.க்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது. அதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. மேலும் சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.