தமிழகத்தில் கந்த சஷ்டி விவகாரம் கடந்த சில நாட்களாக சூடாக இருந்த நிலையில், தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், வழக்கம்போலவே தாமதமாக வந்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி.
இது தொடர்பாக் அவர் வெளியிட்ட பதிவில் “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்றும் உள்ளது. 7 மாதகாலத்துக்குப் பிறகு கந்த சஷ்டி விவகாரம் கையில் எடுக்கப்பட்டதே, ஊடகவியலாளர்கள் விவகாரத்தில் இருந்து தமிழக மக்களை திசைதிருப்பத்தான் என்று கருத்துகள் உலவி வரும் நிலையில், தன்மீது ஈ-பாஸ் வாங்குவது தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளதைத் திசைதிருப்ப கந்த சஷ்டி விவகாரத்தைப் பய்ன்படுத்துகிறாரா ரஜினி என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
ரஜினிகாந்த் இபாஸ் வாங்கினாரா?: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதில்