கருப்பர் கூட்டம் என்ற,யு டியூப’ சேனலில், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, வீடியோ வெளியானதால். அந்த யு டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கபட்டது. யுடியூப் சேனலின் நிர்வாகிசெந்தில்வாசன், சுரேந்தர் நடராஜன், ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் கருப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள யு டியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று கடிதம் எழுதினார்.இதனை தொடர்ந்து, கருப்பர் கூட்டம் சேனலில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர்.