கொரோனா ஊரடங்கு காரணமாக முதலைகள்கூட உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பூங்கா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாத்தால் பூங்காவை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதியில்லாமல் திணறி வருகிறார்கள்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய முதலைப் பூங்காவான இங்கே ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதலைகளுக்கும் உணவு வழங்குவதற்கும் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது என்று பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு நேரத்தில் கோடைகாலம் வந்ததால், இதுவரை ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாக பூங்கா தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.தற்போதுள்ள நிதியை வைத்து அடுத்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மட்டுமே பூங்காவை நிர்வகிக்கமுடியும்” என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

8.5 ஏக்கர் பரப்பில் கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த முதலைப் பூங்காவில் 1 2 ஆயிரத்துக்கும் அதிகமான முதலைகள், பாம்புகள், ஆமைகள் உள்ளன.
. கிராம பகுதியில் ஒரு பழ மொழி உண்டு என்ன முதலை கண்ணீரா? என கேட்பார்கள் ஆனால் தற்போது உள்ள நிதிநெருக்கடியில் உண்மையாகவே முதலைகள் கண்ணீர் வடிக்கின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை..