அப்போல்லாம் SPBக்கு சம்பளம் 5000ரூவா தான்: தயாரிப்பாளர் தானு

SPB
Share

SPBயின் உடல்நிலை நாளுக்கு நாள் மேலும் மேலும் மோசமாகி வருகிறது. இந்நிலையில், எஸ்.பி.பியுடனான தன் அனுபவங்களைப் பகிர்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தானு.

பார்த்திபன் ஹீரோவா நடிச்சு நான் தயாரிச்ச படம்தான் ‘தையல்காரன்’. இந்தப் படத்துக்கும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சார்தான். ‘அப்ப முந்தைய படம் சந்திரபோஸ் வெச்சிப்பண்ணோம், இந்தப் படம் வேற மியூசிக் டைரக்டர் வெச்சிப்பண்ணுவோம்’னு பேசும்போதுதான் எஸ்.பி.பி ஞாபகம் வந்தது. அப்ப அவர் ‘சிகரம்’னு ஒரு படத்துக்கும் இசையமைச்சிட்டிருந்தார். முத்துராமன் சார்கூடவும் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. நானும் பழக்கம்ன்றதால நாங்க கேட்டதும், இசையமைக்க ஒத்துக்கிட்டார்.

அவர் வீட்டிலேயேதான் பாடல் கம்போஸிங் நடந்தது. அவர்கூடவே ஶ்ரீனிவாசமூர்த்தின்னு ஒருத்தர் இருப்பார். இப்ப அவர் ஏ.ஆர்.ரஹ்மான்கூட இருக்கார். இந்தப் படத்துக்கான எல்லா பாடல்களையும் வாலி சார்தான் எழுதினார். கம்போஸிங் அப்ப வாலி சார்கூட உட்காரும்போது அவ்ளோ கலாட்டாவா இருக்கும். வாலி சாரை பயங்கரமா கிண்டல் பண்ணுவார் எஸ்.பி.பி. இதுல ‘அப்பாடி பப்பாளிதான்… என் பூவுடம்பு விக்காத தக்காளிதான்… என் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளிதான்…’னு வாலி சார் ஒரு பாட்டு எழுதியிருப்பார்.

இந்தப் பாட்டு கம்போஸிங் அப்ப ‘அனுபவம் பேசுது போலிருக்கே’ன்னு வாலி சாரை அவ்ளோ ஜாலியா கிண்டல் பண்ணி சிரிச்சிட்டிருப்பார். அப்பலாம் சம்பளம் ரொம்ப கம்மிதான். இந்தப் படத்துக்கு எவ்ளோ சம்பளம் கொடுத்தேன்னுகூட சரியா ஞாபகம் இல்ல. அப்ப ஒரு பாட்டு பாட 5000 ரூபாய் சம்பளம் வாங்கிட்டிருந்தார் பாலு.


Share

Related posts

மக்னா யானை: கோவையில் காயம்பட்டு சுற்றி வந்த யானை உயிரிழப்பு

Admin

லாக் டவுன் விதிமுறைகளை மீறினார்களா?-நடிகர்கள் விமல், சூரி?

Admin

இனிமே தமிழகத்தின் அனைத்து அரசு கலை – அறிவியல் கல்லூரிகளிலும்:ஒரே ஷிப்ட் முறையை உயர்கல்வித்துறை அமல்

Admin

Leave a Comment