சிவாஜிக்கு பிறகு எஸ்.பி.பி.க்குதான் அரச மரியாதை

Police respect
Share

பாடகர் எஸ்.பி.பி. இறப்பால் ஒட்டுமொத்த இந்தியாவும் கலங்கியுள்ளது. குடியரசுத் தலைவர் முதல் கடைகோடி ரசிகன் வரை பலரும் தங்கள் சோகத்தை பல வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

மரியாதை நிமித்தமாக எஸ்பிபியின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. எனவே, தமிழகக் காவல்துறையின் ஆயுதப் படையினர் (திருவள்ளூர் மாவட்டக் காவல்துறையாக இருக்கலாம்) அணிவகுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய பிறகு பாலசுப்பிரமணியத்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுக்கு புதுச்சேரி அரசு வழங்கிய அரச மரியாதை பலராலும் பெருமிதத்துடன் கவனிக்கப்பட்டது.

தமிழா? தெலுங்கா? உண்மையிலேயே எஸ்.பி.பி.யின் முதல் பாடல் எது

இந்நிலையில், எஸ்.பி.பிக்கு வழங்கப்படும் அரச மரியாதையைத் தொடர்ந்து, பலரும் ஏன் அரச மரியாதை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும், திரைத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு ஏன் இப்படி என்பதைப் பிரதான கேள்வியாக சிலர் முன்வைத்து வருகின்றனர்.

முன்னதாக திரையுலகில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது எஸ்பிபியை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல, கர்நாடக அரசும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.


Share

Related posts

செப்.17ல் இன்ஜினியரிங் கவுன்சலிங்: தரவரிசை பட்டியல் செப்.7ம் தேதி வெளியீடு

gowsalya mathiyazhagn

சென்னையிலும் 740 டன் அமோனியம் நைட்ரேட்: பெய்ரூட் சம்பவத்தால் பதற்றத்தில் மக்கள்

gowsalya mathiyazhagn

நாளை தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு

gowsalya mathiyazhagn

Leave a Comment