இலங்கை தாதா கோவையில் உயிரிழப்பு: இச்சம்பவம் குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைப்பு…

Share

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, 36, கோவை சேரன் மாநகர் பகுதியில் தங்கியிருந்தார். கடந்த ஜூலை, 3ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இவர் உயிரிழந்தது குறித்து பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், போலி ஆவணங்கள் மூலம் குடியுரிமையை மறைத்து அங்கொட லொக்காவுக்கு ஆதார் அட்டை பெற்றது, அதற்கு உதவியாக இருந்தது குறித்து கோவை மாநகர போலீசார் மதுரையை சேர்ந்த சிவகாமி சுந்தரி, 36, அங்கொட லொக்காவுடன் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, 27, மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன், 32, ஆகியோரை கைது செய்தனர்.

இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., இன்று, வழக்கு குறித்த விசாரணையை துவங்கினர். சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்கர் கோவையில் முகாமிட்டு வழக்கு குறித்து அதிகாரிகளுடன் விசாரணை நடத்தினார்.


செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:அங்கொட லொக்கா உயிரிழந்தது குறித்தும், அவருக்கு போலி ஆவணங்கள் மூலம் குடியுரிமை மறைக்கப்பட்டு ஆதார் எடுக்கப்பட்டது குறித்தும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவ்வழக்கு குறித்து விசாரிக்க டி.எஸ்.பி., ராஜூ தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், உயிரிழந்தவர் அங்கொடா லொக்கா தானா என்பது குறித்தும் விசாரித்த பின்னரே உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை போலீஸ் அதிகாரிகள் அங்கொட லொக்கா உயிரிப்பு குறித்து தகவல்களை பெற இந்திய துாதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் அங்கொட லொக்க சேரன் மாநகரில் தங்கியிருந்த வீட்டுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவ்வீட்டின் அருகில் குடியிருப்போரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


Share

Related posts

பூகம்பத்தை தாங்கும் திறன் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இல்லை – மத்திய பொதுப்பணித்துறை

Admin

12 அரசு கட்டிடத்தை தகர்த்த மாவோயிஸ்ட்கள்…

Admin

உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சவால்

Admin

Leave a Comment