தஞ்சை அருகே மானோஜிப்பட்டியில் கல்லணை கால்வாயில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சமபவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சை அடுத்த தெற்கு பூக்கொல்லை ராஜகுரு நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நித்திஷ் மற்றும் ராஜராஜன் நகர் சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் ஹரிஹரன் உள்ளிட்ட நண்பர்கள் ஒன்பதுபேர் அருகில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதில் நித்திஷ் ஹரிஹரன் ஆகிய இரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக மீதமுள்ளவர்கள் கரையேறி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அனைவரும் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி மாணவர்கள் இருவரையும் தேட தொடங்கினர்.
மேலும்,தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி பல மணி நேரமாக மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.