விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்… தமிழக அரசு அதிரடி

EPS
Share

தமிழகத்தில் நீடித்து வந்த இ-பாஸ் தலைவலிக்கு தமிழக அரசு ஒரு சிறந்த முடிவை அறிவித்துள்ளது. அதாவது, இனி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ்

அதே சமயம், பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பம் செய்து பெற்று பயணிக்குமாறும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.


Share

Related posts

ஸ்டெர்லைட்டும் தமிழ்நாடும்… 1994 முதல் 2019 வரை…

Admin

இன்றும் 5000 ஐ கடந்த கொரோனா

Admin

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்

Admin

Leave a Comment