கள்ளக்குறிச்சி அருகே தொட்டியம் கிராமத்தில் இளம் பெண்னை கழுத்தறுத்து இளைஞர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி கோவிந்தன், . இவரது இரண்டாவது மகள் 10 ம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தொட்டியம் சுண்ணாம்பு ஒடை அருகே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் கத்தியால் கழுத்து பகுதியில் தாக்கி தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா,சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.