மத்திய அரசின் மும்மொழி கொள்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி எடுத்துள்ள முடிவிற்கு தமிழகம் முழுக்க பரவலாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்
சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் மும்மொழி கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி படிக்கலாம். அதன்பின் தமிழ், ஆங்கிலம், மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க வேண்டும். இந்த மொழியை திணிக்க மாட்டோம். மாணவர்களே இதை தேர்வு செய்து கொள்ள முடியும். மாநில அரசுகள் இதில் முடிவு எடுத்துக்கொள்ளலாம், என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இதனை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றின இது தொடர்பாகல் முதல்வர் பழனிச்சாமி இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின்
முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்:
கடந்த 80 ஆண்டு காலமாக தமிழகம் இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளது
.இது தொடர்பாக நாங்கள் பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.
1965ல் இருந்தே இந்தி திணிப்பை தமிழகமே எதிர்த்து வந்துள்ளது
1968லேயே தமிழக சட்டசபையில் முதல்வர் அண்ணா, மும்மொழி கல்விக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.
முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களும் இரட்டை மொழிக்கொள்கையில் தீவிரமாக இருந்துள்ளனர்.
தற்போது இருக்கும் தமிழக அரசும் இதே கொள்கையோடுதான் இருக்கிறது.
மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று உள்ளது.
அதை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் அதிமுக அரசு எப்போதும் அனுமதிக்காது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
முதல்வரின் இந்த முடிவை தமிழக மக்கள் பாராட்டி வருகிறார்கள். தமிழகத்தின் கொள்கை இதுதான் என்று அவர் மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டார். “இபிஎஸ் இஸ் ராக்கிங்” என்று பலரும் டிவிட் செய்து வருகிறார்கள். கட்சி சார்பு இன்றி ஒருமித்த குரலில் இந்த மொழி பிரச்சனையில் தமிழகம் ஒன்று கூடி இருக்கிறது. முதல்வரை பாராட்டி இருக்கிறது.