மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்(வேதா இல்லம்) இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையினை தற்போது எடுத்துள்ளது. இந்நிலையில், வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெ.தீபா:

- வேதா இல்லம் அரசுடைமையாக்கப்படுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
- பூர்வீக சொத்தை அரசு எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை
- வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து
- ஜெயலலிதாவின் வாரிசாக எங்களை நீதிமன்றமே அறிவித்துள்ள நிலையில் இல்லத்தின் உரிமை எங்களுக்கே உள்ளது
- வேதா இல்லத்தின் மதிப்பீடு ரூ.68 கோடி என்ற கணக்கீடு தவறானது
- எந்த அடிப்படையில் வேதா இல்லத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது?
- ஏன் வேதா இல்லத்தில் உள்ள பொருட்களின் விவரங்களை அரசு ஏன் வெளியிடவில்லை?
- ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கடனுக்கு நாங்கள் தான் பொறுப்பேற்றுள்ளோம்
- இல்லம் அரசுடமையாக்குவதை எதிர்க்கிறோம். இது தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்