திமுக பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் யார் யார்?

திமுக பொதுக்குழு கூட்டம்
Share


அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3,500 பேர் பங்கேற்றுள்ளனர்.

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திமுகவின் 4 வது பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 8 வது பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தை மீண்டும் பொதுச்செயலாளரிடமே ஒப்படைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அத்துடன் மூன்று துணைப்பொதுச் செயலாளர்கள் என்ற முறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஆ.ராசா மற்றும் பொன்முடி இருவரும் துணைப் பொதுச் செயலாளர்களாக பொறுப்பேற்றனர். இன் இதிமுகவில் 5 துணைப் பொதுச்செயலாளர்கள் இருப்பர்.


Share

Related posts

இந்து மதத்தை விமர்சிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – நடிகர் சரத்குமார் கருத்து

Admin

ஸ்டெர்லைட்டும் தமிழ்நாடும்… 1994 முதல் 2019 வரை…

Admin

தமிழில் பேச அனுமதி இல்லை: தொழிற்சாலை மேலாளர் நிபந்தனையால் போராட்டம்

Admin

Leave a Comment