2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதலமைச்சரை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜு கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் பரவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவின் கடந்த காலங்களை சுட்டிக்காட்டி அதே போல் எதிர்காலத்தில் செயல்பட உள்ளதாக தெரிவித்தார், அப்படியானால்,முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிக்காமலேயே அதிமுக களமிறங்கப்போகிறதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.