மதுரை ஆட்சியர் அலுவலகத்தில்நூதனப் போராட்டம் நடத்திய பெண்கள்

Share

சீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தக்கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சொட்டாங்கல், கிச்சு கிச்சு தாம்பலம் விளையாடி பெண்கள் நூதனப் போராட்டம் நடத்தினர்.

சீர் மரபினருக்கான இஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். சீர் மரபினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க விரிவான ஏற்பாடுகளுடன் கூடிய தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

27 சதவிகித சீர் மரபினர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். என பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் சொட்டாங்கல் விளையாடியும், கிச்சு கிச்சு தாம்பலம் விளையாடியும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Share

Related posts

மகேந்திர சிங் தோனிக்கு பிரதமர் மோடி கடிதம்

Admin

பொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி

Admin

ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் : போக்குவரத்து கழகம்

Admin

Leave a Comment