இந்த கொரோனா காலகட்டத்தில் சமூக வலைதளமான டிவிட்டரில் பல வீடியோக்கள் வைரலாக பரவிவருகிறது
அந்த வகையில்,ஆமை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், எதிர்பாராதவிதமாக பாறையில் விழுந்துகிடக்கும் மீனை சிறைய ஆமை ஒன்று தண்ணீருக்குள் இழுத்துப்போடுகிறது. உடனே, அந்த மீன் தண்ணீருக்குள் சென்றுவிடுகிறது. 9 நொடிகளே இருக்கும் அந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
தனது மீன் நண்பனை ஆமை ஒன்று காப்பாற்றுகிறது” என்ற தலைப்பில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. பலர் அந்த வீடியோவைப் பார்த்து பலவிதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். நட்பு மனிதனுக்கு மட்டும் இல்லை ஆமை மீனுக்கும் உண்டு சந்தானம் சொல்றமாதிரி நண்பன்ணாலே நல்லவநன்தான்..