கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததில் மக்கள் மாஸ்க்குகள் அணியாமல் எங்கும் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.
நீண்ட நேரம் மாஸ்க் அணியும் போது தண்ணீர் தாகம் எடுத்தாலோ அல்லது ஏதேனும் சாப்பிடவேண்டும் என்றாலோ அதற்கான வாய்ப்புகள் இல்லை.மாஸ்க்குகளை அகற்றிய பிறகே சாப்பிடமுடியும். ஆனால் மாஸ்க் அணிந்தபடியே சாப்பிட
முடியும் என்பதை நீருபித்து இருக்கிறார் பிரிட்டிஷ் மாடல் எம்மா லூயிஸ்
அதாவது மூக்கை மறைக்கும் படி மேல் முகத்தில் ஒரு மாஸ்க்கும், தாடையை மறைக்கும் படி கீழே ஒரு மாஸ்க்கும் அணிந்துள்ளார். வாயை மூடி இருக்கும்போது இந்த இரு மாஸ்க்குகளும் சேர்ந்து வாயை மூடிக் கொள்கின்றன. அவர் வாயைத் திறந்து சாப்பிடும்போது மாஸ்குகள் விலகிக் கொள்கின்றன. எம்மா என்ன ஒரு புத்திசாலித்தனம்… என வியந்து போய் உள்ளனர் இணைய வாசிகள்.