3 நிறுவனங்களிடம் இருந்து 9 கோடி தடுப்பூசிகள் வாங்கும் – பிரிட்டன்

Share

3 மருந்து நிறுவனங்களிடமிருந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிவரும் நிலையில். அவர்களிடமிருந்து 9 கோடி தடுப்பூசிகளை முதலில் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பிரிட்டன் வர்த்தக அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார்.

அதன் படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டட ஆஸ்ட்ராஜெனேகாவால் தயாரிக்கப்பட உள்ள தடுப்பூசி, லண்டன் இம்பீரியல் கல்லூரியால் கண்டுபிடிக்கப்பட்டு ஃபைசர் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ள தடுப்பூசி மற்றும் வால்நேவா நிறுவனத்தின் தடுப்பூசி ஆகிய மூன்றையும் முதலிலேயே கொள்முதல் செய்ய முடிவெடுத்து அதற்கான ஒப்பந்தங்களை பிரிட்டன் அரசு போட்டுள்ளது.

எவ்வளவு விரைவாக முடியுமோ, அந்த அளவுக்கு தடுப்பூசியை பிரிட்டன் மக்களுக்கு பயன்படுத்த உறுதி பூண்டுள்ளதாகவும் அலோக் சர்மா தெரிவித்துள்ளார்


Share

Related posts

ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்

Admin

தேர்தலை கொஞ்சம் தள்ளிவைக்கலாம் : டிரம்ப் திடீர் முடிவு..

Admin

24 மணி நேரத்தில் டிக்டாக் செயலிக்கு தடை : அதிபர் டிரம்ப் தகவல்

Admin

Leave a Comment