சீனாவின், ஷாங்காய் நகருக்கு மிக அருகே, இரண்டு போர் விமானங்களை, அமெரிக்கா பறக்கவிட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்கா – சீனா இடையே, பனிப்போர் நிலவி வரும் நிலையில். இரண்டு நாட்டின் தூதரகங்களும் அண்மையில் மூடப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான, ‘பி – 8ஏ’ மற்றும் ‘இ.பி. – 3இ’ ஆகிய, இரண்டு போர் விமானங்கள், கிழக்காசிய நாடான, தைவான் கடல் பகுதியில் இருந்து, சீனாவின் ஸேஜியாங் மற்றும் புஜியான் கடல் பகுதிக்குள், நேற்று முன் தினம் நுழைந்தது.சீன வர்த்தக தலைநகராக கருதப்படும், ஷாங்காய் நகரில் இருந்து, 76 கி.மீ., தொலைவில், இந்த விமானங்கள் பறந்தன. ‘சீன நகருக்கு மிக அருகே, அமெரிக்க போர் விமானங்கள் பறந்தது, இதுவே முதல் முறை’ என, கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள பனிப்போர் , பெரும் போராகா மாறுமோ? என அஞ்சுகின்றனர் சர்வதேச பார்வையாளர்கள்..