ஹாங்காங் விவகாரத்தில் கருத்து கூற : அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு சீனா தடை

Share

ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அமெரிக்காவை சேர்ந்த 11 அரசியல்வாதிகள் மற்றும் சில அமைப்புகளின் தலைவர்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. எந்தெந்த மாதிரியான தடைகள் விதிக்கப்பட்டன என அது பற்றிய அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் கூறுகையில், இந்த 11 பேரும் ஹாங்காங் விவகாரத்தில் மோசமாக செயல்பட்டதால் இந்தத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத 11 பேர் கொண்ட பட்டியலில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான மேக்ரோ ரூபியோ, டெட் குரூஸ், ஜோஷ் ஹாலே, டாம் காட்டன், கிறிஸ் ஸ்மித் உள்ளிட்டோரும், சில அமைப்புகளின் தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்த தடைப் பட்டியலில் சீனா, ஹாங்காங்கை சேர்ந்த 11 பேர் இடம்பெற்றிருந்தனர். அதே எண்ணிக்கையிலான தடையை இப்போது சீனா அறிவித்துள்ளது.


Share

Related posts

இங்கிலாந்து மருந்தை திருட முயற்சிக்கும் ரஷ்யா…

Admin

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Admin

கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் – WHO

Admin

Leave a Comment