கொரோனா ஏற்படுத்திய தாக்கமே இதுவரை சீராகாத நிலையில், புதுவகை வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த புதுவகை வைரஸ் உண்ணிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா போன்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும தன்மை கொண்டது என்றும் மருத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது வரை இந்த வைரஸிற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரத்தம் அல்லது சளி மூலம் மனிதர்கள் மத்தியில் பரவும் என்று சீனாவை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த வைரஸ் சீனாவில் புதிதில்லை என்றும், கடந்த 2011ஆம் ஆண்டே பரவியுள்ளது எனவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே இந்த வைரஸ் குறித்து அச்சமடைய தேவையில்லை என்று சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.