சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்- அதிபர் வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம் செப்.29..

Share

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம் செப். 29-ம் தேதி முதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப் பதவி காலம் நிறைவடைய உள்ளது.அதேசமயம் கொரோனா பரவல் அமெரிக்காவில் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், நாட்டின் அடுத்த அதிபரை தேர்வு செய்ய அமெரிக்க மக்கள் தயாராகி வருகின்றனர். தற்போது குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் களமிறங்குகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் நடத்தப்படபடும் நிகழ்வு அமெரிக்காவில் வழக்கத்தில் உள்ளது. இதற்கான முதல் விவாதம் செப்டம்பர் 29-ம் தேதி ஒஹிகோ மாகாணத்தில் க்ளைவ் லாண்டிலும், அக்.15-ம் தேதி, புளோரிடாவிலும், ,அக்.22-ம் தேதி டென்னிசி மாகாணத்திலும், என மொத்தம் மூன்று விவாதங்கள் நடக்கிறது.இந்த விவாதத்தில் முதன்முறையாக டிரம்ப், ஜோபிடன் ஆகியோர் நேருக்கு நேராக சந்தித்து விவாதிக்கின்றனர்.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால்,பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை எவ்வாறு இருக்கும் என்று விவாத்திக்க உள்ளனர்,இந்நிலையில் துணை அதிபருக்கான விவாதம் அக்.7-ம் தேதி துவங்குகிறது.


Share

Related posts

சீன தூதரகத்தை 72 மணி நேரத்தில் மூட உத்தரவு

Admin

சுதந்திர தினத்தை முன்னிட்டு டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக இந்திய தேசிய கொடி பறந்தது…

Admin

அடுத்த45நாட்களில் அமெரிக்காவில்:டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை

Admin

Leave a Comment