ஊழல் வழக்கில், மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது, மலேசியாவின் அரசு முதலீட்டு நிதியமான 1 எம்.டி.பியில் (1 MDB) 4500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர்மேல் குற்றம் சுமத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊழல் உள்ளிட்ட ஏழு குற்றப் பிரிவுகளின் கீழ் நஜீப் ரசாக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது.
ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 369 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.