கொரோனா வைரஸ் உடன் மக்கள் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதாநாம் கெப்ரிசியஸ் கூறியுள்ளார்.
ஜெனீவாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ் கொரோனா தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது, கொரோனாவை பாதுகாப்பாக எதிர்கொள்ள வேண்டும் எனவும்,கொரோனா தொற்று பரவ இளைஞர்கள் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக கூறிய அவர்.சமுதாயத்தை காக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளதாகவும்,இளைஞர்கள் நோயால் வெல்ல முடியாதவர்கள் அல்ல அவர்களும் மற்றவர்களைப் போல உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றார்.