சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செயலிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவின் டிக்டாக், வீசாட் உள்பட 106 செல்போன் செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இந்தியா முதன்முதலில் தடை விதித்தது.
இந்தியாவின் இந்த செயலை அமெரி்க்க அரசும், குடியரசுக் கட்சி எம்.பி.க்களும் வெகுவாகப் பாராட்டினர். அமெரிக்காவிலும் விரைவில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்படும்என டிரம்ப் தெரிவித்தார். இந்த நிலையில் அமெரிக்காவில்அடுத்த 45 நாட்களில்டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்