வெடிவிபத்தை தொடர்ந்து போராட்டத்தில்: பற்றி எரியும் லெபனான்..

Share

லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தின் வடுக்களின் காயம் ஆறாத நிலையில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பொதுமக்கள் சாலைகளில் தீ வைத்தும், கற்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 150 – க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த வெடி விபத்தில் சுமார் 3,லடசத்திற்கு அதிகமானோர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.

வெடி விபத்தால் உருவான அதிர்வால் உடைந்த கண்ணாடித் துண்டுகளும் கானிகிரிட் சிதறல்களும் சாலைகளில் சிதறிக் கிடக்கின்றன. இவற்றை எவ்வாறு அப்புறபடுத்துவது என தவித்து வருகிறது லெபனான். இந்தக் கோரமான வெடி விபத்துக்கு அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பொது மக்களுக்கு ஆறுதலை தர முடியாமலும் உரிய நிவாரணம் அளிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்நாடு அரசு பலர் வீடுகளை இழந்து சாலைகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, பொருளாதார பிரச்னை, உள்நாட்டுப் போர் ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ,தற்போது ஏற்பட்ட வெடி விபத்தால் அணைத்தையும் இழந்து நடுவீதியில் தவிக்கின்றனர்.

இந்த மோசமான நிலைக்கு ஆளும் லெபனான் அரசின் அலட்சியம் தான் காரணம் என்று பொதுமக்கள் கோபத்துடன் சாலைகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். ஏராளமானோர், நாடாளுமன்றத்துக்கு முன் கூடி சாலைகளில் தீ வைத்தும், கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக் காரர்களுக்கு ஆதரவாகப் பொதுமக்களும் சாலைகளில் திரண்டுவருகின்றனர்.

போராட்டக்காரர்கள், குற்றவாளியே… ராஜினாமா செய் என்று ஆளுங்கட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்.

பலரும் சாலைகளில் திரண்டுவருவதால், பெய்ரூட் போராட்டக் கலமாக மாறிவருகிறது. காவல்துறையினர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் களைத்துவருகின்றனர்.

பொது மக்கள் பலரும் வீதிக்கு இறங்கி போராடுவதால்,பெய்ரூட் போராட்டக் கலமாக மாறிவருகிறது. காவல்துறையினர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் களைத்துவருகின்றனர்.

வெடி விபத்தால் நிலை குலைந்து போயிருக்கும் லெபனானுக்கு மக்களின் போராட்டம் சூழ்நிலையினை மேலும் மோசமாக்கியுள்ளது..


Share

Related posts

ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை விதித்தஹாங்காங்

Admin

இலங்கை தாதா கோவையில் உயிரிழப்பு: இச்சம்பவம் குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைப்பு…

Admin

1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை:பாகிஸ்தானில் சேதம்

Admin

Leave a Comment