சுதந்திர தினத்தை முன்னிட்டு டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக இந்திய தேசிய கொடி பறந்தது…

Share

இந்தியா முழுவதும் சுதந்திர தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் வசித்து வரும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் வசித்து வரும் இந்தியர்கள் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடியான மூவர்ண கொடியை ஏற்றினர்.

இதில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பங்கேற்றனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கமும் ஒன்று. இங்கு மூவர்ணக் கொடி ஏற்று விழா நடைப்பெறுவது, இது முதன்முறையாகும்.

ஏற்கனவே, ஆகஸ்டு 5-ம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின்போது நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் பூமி பூஜை படங்கள் 3டியில் காட்சிப்படுத்தப்பட்டது.


Share

Related posts

சதுரகிரியில் ஆடி அமாவாசை தரிசனத்துக்கு அனுமதி இல்லை

Admin

பாசம் என்பதோர்… – சிறுகதை

Admin

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

Admin

Leave a Comment