தேசிய பாதுகாப்பு மற்றும் தணிக்கை செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு இருப்பதால் சீனாவின் டிக் டாக் ஆப்பை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து ஆலோசித்து வரும் நிலையில் டிக் டாக் ஆப்பை மைக்ரோ சாப்ட் நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.டிக் டாக் ஆப்பை வாங்குவதற்கு அமெரிக்காவின் நிதி நிறுவனங்கள், டெக் நிறுவனங்கள் முன் வந்து இருப்பதாக செய்தி வெளியானாலும், டிக் டாக் ஆப்பை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் கருத்துக்கள் தெரிவிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்துள்ளது.