கேரள விமான விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது:அமெரிக்கா

Share

துபாயில் இருந்து நேற்று 190 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 173 பேர் படுகாயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில், கேரள விமான விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிராத்திக்கிறோம் எனவும்,

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்காவும், நண்பர்களுக்காகவும் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Share

Related posts

மனிதாபிமானத்துடன் செயல்பட்ட கேரள பெண்ணுக்கு கிடைத்த புதிய வீடு…

Admin

அல்லி நகரம் முதல் இயக்குநர் இமயம் வரை: பாரதிராஜா

Admin

டிக்டாக்கை விற்க கால அவகாசம் கொடுத்த டிரம்ப்

Admin

Leave a Comment