லெபனான் வெடிவிபத்து:பதவி விலகினார் பிரதமர் ஹசன் தியாப்

Share

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் ரசாயனம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இது எதிர்பாராதவிதமாக வெடித்து, பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 160 பேர் பலியாகினர்; 6,000 பேர் காயமடைந்தனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.பல கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, லெபனானில் போராட்டங்கள் நிகழ்ந்தன.

இந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், “மக்களுடன் இணைந்து மாற்றத்துக்காக செயல்படவுள்ளேன். ஊழல்புரியும் அரசியல்வாதிகள் தங்கள் செயலுக்காக வெட்கமடைய வேண்டும். அவர்களின் ஊழலே நாட்டின் தற்போதைய மோசமான நிலைக்கு காரணம்’ என்றார்.பிரதமராக பதவியேற்ற ஹசன் தியாபும் குறுகிய காலத்தில் பதவி விலகியுள்ளார். இவர் அரசியலுக்கு வரும் முன், பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது,


Share

Related posts

அமெரிக்காவுக்கு சரிவு அமேசானுக்கு அள்ளுது வருமானம்.

Admin

கொரோனாவே முடியல அதுக்குல்ல இன்னொன்னா: அதிர்ச்சியில் சீனா??

Admin

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்குச் சிறை தண்டனை

Admin

Leave a Comment