தேவதை என்றால் இறக்கை வேண்டுமா என்ன:லெபனான் வெடி விபத்து..

Share

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. இதனை புகைப்படம் எடுக்கஉள்ளூர் புகைப்பட கலைஞரான பிலால் ஜாவிஸ் தனது கேமராவை எடுத்துக்கொண்டு விபத்து தொடர்பான புகைப்படங்களை எடுப்பதற்காக அஷ்ரஃபிஹா மாவட்டத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு உள்ள அல் ரோவ்ம் மருத்துவமனை குண்டு வெடிப்பால் நிலைகுலைந்திருந்தது. மருத்துவமனைக்குள் சென்ற பிலால் அங்கு ஒரு பெண் செவிலியர் தனது ஒரு கைகளில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறுகையில் தொலைபேசியில் அவசர உதவிக்காக அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார்.

இதைபார்த்த பிலால் ஒரு கையில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறு கையில் தொலைபேசியை வைத்துக்கொண்டிருந்த அந்த செவிலியரை தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்தார்.

பின்னர் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். குழந்தையை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்ட செவிலியரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களும் செவிலியரின் சேவையினை பாராட்டி வருகின்றனர்.. உண்மை தான் நம்மை காக்கும் தேவதைகள் இறக்கையின் உடன் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மனிதம் மாறாதா செவிலியர் ரூபத்திலும் இருக்கலாம்…


Share

Related posts

வெளியானது 5ஜி போன்கள்…

Admin

கைலாசா: உணவும் கல்வியும் எங்க நாட்டில் ஃப்ரீ… நித்தி அதிரடி

Admin

1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை:பாகிஸ்தானில் சேதம்

Admin

Leave a Comment