இங்கிலாந்தின் சவுத் யார்க்ஷயர் என்ற இடத்தில் தனது பெண் தோழியிடம் காதலை சொல்ல ரொமாண்டிக்கான சூழலை உருவாக்க வீடு முழுவதும் 100 மெகுழுவர்த்தி மற்றும் விளக்குகளை பிரிட்டிஷ்காரர் ஒருவர் ஏற்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

காதலை சொல்லும் போது எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி கீழே விழுந்ததன் மூலம் வீடு தீப்பற்றி உள்ளது, இதனை பற்றி தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 3 வாகனங்களில் வந்து போராடி தீயை அணைத்தனர். சேதமடைந்த வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உன்னோட காதலை சொல்லிட்ட ஆனா இப்படி வீட்டையே கொளுத்திட்டியே பா என இணைய வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். அடுத்த முறை யாரவது காதல் பரிசு கொடுக்கும் போது எளிதில் தீ பிடிக்காத பொருளை பரிசாக கொடுங்கள். ஏன்னா பாதுகாப்பு முக்கியம் பாருங்க..
1 comment
நல்ல முடிவு
வாழ்த்துக்கள்